உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
- எதிர்பாராத விதமாக முனுசாமி மீது மின்சாரம் தாக்கியது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
வேலூர் மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது68). இவர் திருத்தணி அடுத்த மத்தூர் பொன்பாடி ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் பாதை தண்டவாளம் சீரமைக்கும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அவர் பொன்பாடி ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை குளிப்பதற்காக மின்மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக முனுசாமி மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த திருத்தணி போலீசார் முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.