தூய்மைப் பணிக்காக வாகனங்களை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டன
- ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஒன்றியத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கிராமங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ள வசதியாக, அனக்காவூர், எச்சூர் ஆகிய கிராமங்களுக்கு தலா ரூ.8.50 லட்சம் மதிப்பில் 2 டிராக்டர்கள் வழங்கப்பட்டு இருந்தன.
அதேப் போல் அனக்காவூர், மேல்மா, மகாஜனம்பாக்கம், அனக்காவூர் ஆகிய கிராமங்களில் தூய்மைப்பணிக்காக தலா ரூ.2.77 லட்சம் மதிப்பில் 3 மின்கலன் வண்டிகள் வழங்கப்பட்டு இருந்தன.
இந்த நிகழ்ச்சி அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமைத் தாங்கினார்.
செய்யாறுஒ.ஜோதி எம்.எல்.ஏ. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனுவாசன் ஆகியோர் பங்கேற்று டிராக்டர்கள் மற்றும் மின்கலன் வண்டிகளை ஊராட்சித் தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதில் மாவட்டக் கவுன்சிலர் சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராதிகா குமாரசாமி, கனிமொழி மோகன், முன்னாள் எம்.எல்.ஏ கமலக்கண்ணன், அனக்காவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சி.கே.ரவிக்குமார், திராவிட முருகன், மோ.ரவி, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.