உள்ளூர் செய்திகள்
கல்லூரி செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
- நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் வலியுறுத்தல்
- படிப்பு வீணாகி போவதாகவும் குற்றச்சாட்டு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில்
இருந்து தினந்தோறும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
மாலை நேரம் கல்லூரியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆரணி பழைய பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி வசதிகள் இல்லாத காரணத்தினால் தினந்தோறும் 2 பாடபிரிவுகள் பின்னரே கல்லூரிக்கு செல்ல நேரிடுகின்றன.
இதனால் கல்லூரி படிப்பு வீணாகி போவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையீட்டு மதிய நேரத்தில் செய்யாறு பகுதிக்கு அதிகளவில் சிறப்பு பஸ்கள் இயக்கி மாணவர்களின் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.