அகலபாதை வழியே ரெயிலை இயக்க வலியுறுத்தல்
- திருத்துறைப்பூண்டி, காரைக்குடி அகலபாதை வழியே சென்னை-ராமேஸ்வரம் ரெயிலை இயக்க வலியுறுத்தப்பட்டது.
- இந்திய ரெயில்வே அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு சென்னை - ராமேஸ்வரம் ரயில் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி அகலரயில் பாதை வழியே இயக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பார்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் -காரைக்குடி அகல ரெயில் பாதை ரூ .1500 கோடி செலவில் அமைக்கப்பட்டு 3 வருடங்கள் ஆகிவிட்டது. சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரெயில் திருச்சி, காரைக்குடி வழியே செல்கிறது.
ராமேஸ்வரம் செல்லும் ரயிலை திருவாரூர் காரைக்குடி மார்க்கத்தில் இயக்கினால் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் குறையும்.
எரிபொருளும் அலைச்சலும் பயணிகளின் பயண செலவு மிகவும் குறையும். எனவே இந்திய ரெயில்வே அமைச்சகம் உடனடியாக செயல்பட்டு சென்னை - ராமேஸ்வரம் ரயில் திருத்துறைப்பூண்டி, காரைக்குடி அகலரயில் பாதை வழியே இயக்க வேண்டும். மேலும் புறக்கணிக்கப்பட்ட ரெயில்களை இயக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.