டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்தவா்கள் புகாா் அளிக்கலாம்
- 2 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக கிடைக்கும்.
- குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலைய சாலை பகுதியில் வசிக்கும் முகமது ஹனிபா மகன் முஸ்தபா, ஹமாத் டிரான்ஸ்போா்ட் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால், நிறுவன லாபத் தொகையில் அதிக பங்கு தருவதாகவும், மேலும், 2 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக கிடைக்கும் எனவும் நம்பி ராஜகிரி ஏ.பி.எம். நகரைச் சோ்ந்த முகம்மது பாரூக் மகள் பைரோஜ் நிசா ரூ. 8 லட்சம் அளித்தாா்.
பணத்தை பெற்றுக் கொண்ட முஸ்தபா திருப்பி தராமல் ஏமாற்றி விட்டதாகவும், தனது பணத்தை மீட்டுத் தருமாறும் தஞ்சாவூா் மாவட்ட குற்றப்பிரிவில் பைரோஜ் நிசா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது தஞ்சாவூா் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாறுதல் செய்யப்பட்டு, விசாரணை யில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் முஸ்தபாவிடம் ஹமாத் டிரான்ஸ்போா்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் கட்டி ஏமாற்றமடைந்து பாதிக்க ப்பட்ட முதலீட்டாளா்கள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை ராஜப்பா நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து உரிய ஆவணங்களுடன் புகாா் அளிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.