வாசுதேவநல்லூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் முப்பெரும் விழா
- நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார்.
- விழாவில் மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றன.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் செயல்படும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குறைந்தோர் சிறப்புப் பள்ளி 11-வது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழரசன், குருசாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் தவமணி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் தாசில்தார் பாலகிருஷ்ணன், வேலுச்சாமி, வக்கீல் செந்தில்குமார், டாக்டர் மயில்வாகனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளி மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் மற்றும் யோகா நிகழ்ச்சி நடைபெற்றன.
வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பேரூராட்சிமன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தமிழ் ஆசிரியர் வாசு கணேசன், அம்ஜத்கான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், இயன்முறை மருத்துவர் புனிதா, உதவி ஆசிரியர் மகேஸ்வரி, கவிதா, முத்துலட்சுமி, அருண், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.