திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 6 போலி டாக்டர்கள் கைது
- 12 பேர் கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு
- ஆம்பூர், வாணியம்பாடியில் சோதனை 12 பேர் கொண்ட குழு அமைத்து கண்காணிப்பு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவம் படிக்காமல் சிலர் கிளீனிக் நடத்தி பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவ அலுவலர்கள், போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் 12 பேர் கொண்ட குழுவை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போலி மருத்துவர்களை கண்டறிந்து, அவர்களை கைது செய்ய உத்தர விட்டார். திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் நாட்றாம்பள்ளி பகுதிகளில் குழுவினர் சோதனை செய்தனர்.
இதில், திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை கிராமத்தைச் சேர்ந்த பழனி (51) என்பவர் மருத்து வம் படிக்காமல் அதேபகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற அரசு அதிகாரிகள் பழ னியை கைது செய்து அவரது கிளீனிக்கில் இருந்து மருந்து, மாத் திரைகள், சிரஞ்சிகளை பறிமுதல் செய்தனர். அதே பகுதியில் மருத்து வம் படிக்காமல் கடந்த 7 ஆண்டு களாக கிளீனிக் நடத்தி வந்த வேலன் (49) என்பவரையும் போலீ்சார் கைது செய்து, அவரது கிளீனிக்கில் இருந்து மருந்து, மாத்திரைகள், டானிக் உள்ளிட்டவை களை பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் சுற்ற வட்டாரப்பகுதி களில் ஆம்பூர் அரசு மருத்துவ மனையின் துணை மருத்துவ அலுவலர் நதியா தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தியதில், ஆம்பூர் அடுத்த மாச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி (47), கடாம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (69) ஆகிய 2 பேரும் மருத்துவம் படிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்திமருத்துவம் பார்த்துவருவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, 2 பேரையும் காவல் போலீசார் கைது செய்து அவர்களது கிளீனிக்கில் இருந்து மருத் துவ உபகரணங்கள் மற்றும் மருந்து-மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த சோதனையில் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்தீபன் (47) என்பவர் மருத்து வம் படிக்காமல் கடந்த 7 ஆண்டு களாக கிளீனிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் அங்கிருந்த மருந்து,மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டையைச் சேர்ந்த கணேஷ் (30) என்பவரும் மருத்து வம் படிக்காமல் வைத்தியம் பார்த்து வந்ததை தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்து அவரது கிளீனிக் குக்கு 'சீல்' வைத்தனர்.