ஆஞ்சநேயர் கோவிலில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
- வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகர் வி.எம்.வட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சாமி கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. எக்ஸெல் ஜி. குமரேசன் தலைமை தாங்கினார்.
கோயம்புத்தூர் சென்னை ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் இதனை தொடர்ந்து கோவை தொழிலதிபர் ஏ.அன்பு அமுதா குடும்பத்தினர் தனது சொந்த செலவில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
இன்று காலை 7 மணி முதல் அன்னதானம் தொடங்கியது. கோவை தொழில் அதிபர் கோவை அன்பு அமுதா குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.
ரைஸ் மில் ராஜா, மின்வாரிய அலுவலர் சுரேஷ், சென்னை மகேந்திரன், கவுன்சிலர் இனியன், வாழைப்பழம் மண்டி சதீஷ், ஹார்டுவேர்ஸ் ராஜேந்திரன், ரெயில்வே ஊழியர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 5 சனிக்கி ழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தானமாக வழங்கி வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.