கொலை வழக்கில் ஆஜராகாத 2 இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்டு
- திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட நீதிபதி உத்தரவு
- 6 மாதமாக ஆஜராகவில்லை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம் பூரை அடுத்த உமராபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட் பட்ட தேவலாபுரம் புதுமனை பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு பார்த்திபன் என்பவர்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக காளிதாஸ் என்பவர்கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
கொலை நடந்தபோது உம ராபாத் போலீஸ் இன்ஸ்பெக் டர்களாககோகுல்ராஜ் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். அவர் களில் கோகுல்ராஜ் தற்போது ஆரணி டவுன் இன்ஸ்பெக்ட ராகவும், பாலசுப்பிரமணி வேலூரில் காத்திருப்போர் பட்டியலிலும் உள்ளனர்.
கொலை வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகும்படி இன்ஸ்பெக்டர்கள் 2 பேருக் கும் பலமுறை சம்மன் அனுப்பியும் கடந்த 6 மாதமாக ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இன்ஸ்பெக்டர்கள் கோகுல் ராஜ், பாலசுப்பிரமணி ஆகியோர் வழக்கம்போல ஆஜராகவில்லை.
இதனால் கூடுதல் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி, இன்ஸ் பெக்டர்கள் 2 பேருக்கும் பிடி வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.