உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி

Published On 2023-06-24 08:04 GMT   |   Update On 2023-06-24 08:04 GMT
  • வீடு வீடாக சென்று விவரங்களை சேகரித்தார்
  • அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என ஆய்வு

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் துறை அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களின் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர்.

அவர்களின் ஊனம் குறித்த தகவல்கள் மேலும் இவர்கள் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவர்களா அல்லது அடையாள அட்டை பெற தகுதியுடையவர்களா என்பதை நேரில் ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி பக்ரிதக்கா பகுதியில் நேற்று வருவாய் கோட்ட அலுவலர் பானு அப்பகுதியில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டார்.

துறை அலுவலர்களை கண்காணித்து ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விவரங்களை சேகரித்தார். ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News