- கலெக்டர் போட்டிகளை தொடக்கி வைத்தார்
- முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க தலைவர் கே. சி. வீரமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜி. செந்தில்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி போட்டிகளை தொடக்கி வைத்தார். போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ேஜாலார்பேட்டை விளையாட்டு அறக்கட்டளை 43 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பின்ஷிப் பதக்கத்தை தட்டிச்சென்றது.
இதற்கு அறக்கட்டளை தலைவர் சுசிகர், செயலாளர் தென்னரசு, பயிற்சியாளர்கள் சபரிகுமார், ஏசுராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வி. சேது ராஜன், நகராட்சி ஆணையர் ஜி. பழனி, திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க கவுரவத் தலைவர் எஸ். பி. சீனிவாசன், பொருளாளர் ஏ. பார்த்திபன் செயலாளர் எம். சிவப்பிரகாசம், தேர்வு குழு தலைவர் கே. மதன்குமார், உள்பட பலர் கலந்த கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செயலாளர் எம் .சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.