ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
- ஏரிகளில் கரைப்பு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி பகுதிகளில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா வையொட்டி ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 31-ந் தேதி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் சுமார் 3அடி முதல் 10 அடி வரை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை பகுதியில் 48 சிலைகள் மற்றும் நாட்டறம்பள்ளி பகுதியில் 28 சிலைகள் சிலைகள் இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்துஅமைப்புகள், இளைஞர்கள் சார்பில் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கும் நிகழ்ச்சிநடைபெற்றது.
ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர் கரசி தலைமையில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது இந்த ஊர்வலத்திற்கு சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஏட்டுகள் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றனர்.
நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் நாட்டறம்புள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், மற்றும் ஆயுதப்படை போலீசார் மற்றும் கமாண்டோ படை, பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர்கள், துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீசார் என 120 பேர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.