- கேமராவில் பணம் திருடும் காட்சிகள் பதிவு
- போலீஸ் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியா(50) என்பவர்.
புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் டீலர் ஷோரூம் நடத்தி வருகிறார்.அதன் பக்கத்தில் பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(27) என்பவர் மீன் வறுவல் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சத்தியா என்பவரின் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை நூதனமாக உடைத்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.6500 ஆயிரம் பணம் மற்றும் கடையில் இருந்த பொருட்கள், கோபி என்பவரின் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து ரூ.5000 ஆகிவற்றை திருடிக்கொண்டு ஷட்டரை அப்படியே திறந்து விட்டு சென்றுள்ளார்.
பின்னர் நேற்று காலை கடையின் உரிமையாளர்கள் வந்து பார்த்த போது கடைகள் திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கேமராவை பார்த்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராவை சிக்காமல் இருப்பதற்கு ஒரு கேமராவை திசையை வேறு பக்கமாக திருப்பி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடைக்குள் உள்ள கேமராவை ஆப் செய்து அதன் பிறகு தனது கைவரிசையை காட்டி கல்லாவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து கடையின் உரிமையாளர்கள் சத்தியா மற்றும் கோபி ஆகியோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.