திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு கொளுத்துவதால் சுகாதார சீர்கேடு
- பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
- கலெக்டரிடம் புகார்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் சகாய அன்னை ஆலய பங்குத்தந்தை கிளமென்ட் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகளை சகாய அன்னை ஆலய சுற்றுசுவர் மற்றும் அக்சீலியம் தொழிற் கல்வி சுற்றுசுவர் அருகில் கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்துகின்றனர்.
தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் குப்பைகள் கொளுத்தும் போது புகை மண்டலம் சூழ்ந்து பொது மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மாசு கலந்து காற்றை சுவாசிப்பதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை அள்ளி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் குப்பைகளை தீயிட்டு எரிக்கக்கூடாது. இவ்வாறு இதில் கூறப்பட்டிருந்தது.