உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிப்பு விழா நடைபெற்றது.

அரசு பள்ளியில் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2022-07-14 08:47 GMT   |   Update On 2022-07-14 08:47 GMT
  • என் குப்பை எனது பொறுப்பு என வாசகம்
  • ஏாளமானோர் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஜோலார்பேட்டை நகராட்சி சார்பில் தூய்மையான நகரங்களுக்கான பொதுமக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களிடையே 'என் குப்பை எனது பொறுப்பு" பள்ளியின் தூய்மையில் மாணவர்களின் பங்கு நகரின் தூய்மையில் மக்களின் பங்கு மற்றும் திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் ஆகிய தலைப்புகளில் மாணவர் மற்றும் மாணவிகளுடையே பேச்சு போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். இப்போட்டியில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாணவி களுக்கிடையே பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இதில் முதல் 4 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி மற்றும் நகர மன்ற தலைவர் காவியா விக்டர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் நகர்மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பொறுப்பாளர் அன்பழகன், நகராட்சி பொறியாளர் கோபு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், சுய உதவி குழு உறுப்பிர்கள் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News