- 3 மாத காலமாக குடிநீர் விநியோகம் செய்ய படவில்லை
- 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பந்தரபள்ளி ஊராட்சி நல்லகிந்தனபள்ளி கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இந்த பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்க பொக்லைன் எந்திரம் மூலம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்ட ப்பட்டது.
இதுவரை அந்த பள்ளத்தை மூடாத காரணத்தால் அப்பகுதி சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் 3 மாத காலமாக குடிநீரும் சரிவர விநியோகம் செய்ய படவில்லை. இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாசரவண னிடம் புகார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பச்சூர்- குப்பம் செல்லும் சாலையில் காலிகுடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறைப்பிடித்தனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடித்ததால் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று போராட்டக்கா ரர்களிடம் சமரசம் பேசினர். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.