உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

புத்தக திருவிழாவை 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர் - ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

Published On 2023-02-07 06:56 GMT   |   Update On 2023-02-07 06:56 GMT
  • ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது.
  • 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.

திருப்பூர் :

திருப்பூா் புத்தகத் திருவிழாவை ஒரு லட்சம் போ் பாா்வையிட்டதுடன், ரூ.2 கோடிக்கு நூல்கள் விற்பனை நடைபெற்று ள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு அரசு, திருப்பூா் மாவட்ட நிா்வாகம், பின்னல் டிரஸ்ட் ஆகியன சாா்பில் 19 ஆவது திருப்பூா் புத்தகத் திருவிழா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி வரையில் 10 நாள்கள் நடைபெற்றது. இந்த புத்தகத் திருவிழாவில் அமைக்கப்ப ட்டிருந்த 152 அரங்குகளில் அரசு துறைகளின் சாா்பில் 27 அரங்குகள் இடம்பெற்றிருந்தன.

இதன் மூலமாக அரசின் திட்டங்கள், வங்கி, கல்வித் துறை சேவை, மருத்துவத் துறை, மகளிா் திட்டம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

புத்தகத் திருவிழாவை திருப்பூா் மட்டுமின்றி கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சோ்ந்த ஒரு லட்சம் போ் பாா்வையிட்டுள்ளதில், 40 ஆயிரம் மாணவ, மாணவி களும் அடங்குவா். இதன் மூலம் சுமாா் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது."

Tags:    

Similar News