உள்ளூர் செய்திகள்

மேயர் தினேஷ் குமார். 

திருப்பூர் தெற்கு பகுதிகளில் இந்த வார இறுதிக்குள் 4-வது கூட்டு குடிநீர் விநியோகம் - மேயர் தகவல்

Published On 2023-04-10 11:05 GMT   |   Update On 2023-04-10 11:05 GMT
  • 44 வது வார்டில் கடந்த 12 தினங்களாக குடிநீர் வரவில்லை.
  • கடந்த ஒரு மாதத்தில் 460 எம்.எல். டி. தண்ணீர் திருப்பூர் மாநகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் 44 வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கண்ணப்பன் பேசியதாவது:- 44 வது வார்டில் கடந்த 12 தினங்களாக குடிநீர் வரவில்லை. இதனால் வார்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இஸ்லாமியர்கள் நிறைந்த எனது வார்டில் தற்போது ரம்ஜான் நோன்பு என்பதால் குறைகளை தீர்க்க சரியான முறையில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதில் அளித்து மேயர் தினேஷ் குமார் பேசியதாவது:- கடந்த ஒரு மாதத்தில் 460 எம் .எல். டி. தண்ணீர் திருப்பூர் மாநகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் நான்காம் கூட்டு குடிநீர் திட்டம் வடக்கு சட்டமன்றத் தொகுதி மட்டுமின்றி தெற்கிலும் வர செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். முதல் கட்டமாக தெற்கு சட்டமன்ற தொகுதியில் இந்த வார இறுதிக்குள் பெரிச்சி பாளையம் வினோபா நகர் , நல்லூர் பகுதிகளில் நான்காம் கூட்டு குடிநீர் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் குறைந்த பட்சம் 5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

ரம்ஜான் பண்டிகை, சித்திரை திருவிழா உள்ளிட்ட பண்டிகைக்காக 18 லாரிகள் மூலம் மாநகராட்சி முழுவதும் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். மாநகராட்சி முழுவதும் 100 சதவீதம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது தான் இலக்கு . அதனை கண்டிப்பாக செய்து கொடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News