உள்ளூர் செய்திகள்

காடுகள்

ஒரு நாடு நன்றாக இருக்க 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

Published On 2023-04-03 10:44 GMT   |   Update On 2023-04-03 10:44 GMT
  • மனித - விலங்கு மோதல், பிரச்னை சமீப காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
  • வெளிநாடுகளில் மரத்தை வெட்ட கடும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை.

திருப்பூர்:

பல்லடம் திருச்சி ரோடு வனாலயத்தில் வான்மழை கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசியதாவது:-

வெளிநாடுகளில் மரத்தை வெட்ட கடும் கட்டுப்பாடு உள்ளது. இந்தியாவில் இல்லை. மனித - விலங்கு மோதல், பிரச்னை சமீப காலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு நாடு நன்றாக இருக்க 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் நம்மிடம் 24 சதவீதம் மட்டுமே உள்ளன. மரங்களை விரைவாக வளர வைப்பது, பயன்படுத்துதல் என்பதை ஆராய்ந்து வருகிறோம். வளர்ச்சி அடையும் நாடுகளில் இருந்த இந்தியா தற்போது வளர்ந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News