உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றம்

Published On 2023-03-28 07:20 GMT   |   Update On 2023-03-28 07:20 GMT
  • இரும்புச்சத்து மற்றும் போலிக் சத்து மாத்திரை 52 வாரங்களுக்கு வினியோகிக்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.
  • பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியரை நியமித்து கொள்ள வேண்டும்.

தாராபுரம் :

பள்ளி மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் விதிகளில் சில மாற்றங்களை பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கும் விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி இரும்புச்சத்து மற்றும் போலிக் சத்து மாத்திரை வாரத்துக்கு ஒன்று வீதம் 52 வாரங்களுக்கு வினியோகிக்கும் திட்டம் தற்போது அமலில் உள்ளது.

வாரந்தோறும் வியாழக்கி ழமை ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 400 மி.கி., திறன் கொண்ட மாத்திரைகளும், 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்க ளுக்கு 500 மி.கி., அளவி லான சத்து மாத்திரைகளும் வழங்க வேண்டும்.இப்பணி க்கென பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அலுவலர் அல்லது ஆசிரியரை தலைமை ஆசிரியர் நியமித்து கொள்ள வேண்டும். வாரத்துக்கு ஒரு மாத்திரை மட்டுமே வழங்க வேண்டும்.அதை ஆசிரியர் முன்னிலை யில் மாணவர் உண்பதை உறுதி செய்ய வேண்டும்.மாத்திரை உட்கொள்ளும் முன் மாணவர் ஆரோக்கி யமான மதிய உணவு எடுத்துக் கொண்டார்களா என்பதை உறுதிப்படுத்திட வேண்டும். காய்ச்சல், மயக்கம், வாந்தி உள்ளிட்ட பாதிப்பு , ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்தால் அம்மாணவருக்கு மாத்திரை வழங்கத் தேவையில்லை. மாத்திரை வழங்கும் நாளில் மாணவர் பள்ளிக்கு வர வில்லையெனில் அதற்கு அடுத்த நாள் சத்து மாத்திரை வழங்க வேண்டு ம். மாறாக அதற்கு அடுத்த வாரம் (வியாழன்) இரண்டு மாத்திரைகளை வழங்க கூடாது. சத்து மாத்திரை வழங்கிட விபரங்களை ஒவ்வொரு வாரமும் சேகரித்து பட்டியல் தயா ரித்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு ள்ளது. இது குறித்து விரிவான வழிகாட்டுதல் மாவட்ட துணை இயக்குனர், மாநகராட்சி சுகாதாரப்பிரி வினருக்கு அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.

Tags:    

Similar News