உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை - நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

Published On 2023-04-15 05:11 GMT   |   Update On 2023-04-15 05:11 GMT
  • 2 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் வாகன உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • உரிமம் பெற்றவர்களை தவிர வேறு யாரும் இந்த பணிகளில் ஈடுபடக்கூடாது.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள் 2 ஆண்டுகள் செல்லத்தக்க வகையில் வாகன உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். இதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு யாரும் இந்த பணிகளில் ஈடுபடக்கூடாது. உரிமம் பெற்றவர்கள் உரிமத்தில் குறிப்பிட்டுள்ளபடி உரிய நேரத்தில் குறிப்பிட்ட வழிகளை பின்பற்றி முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும், உரிமம் பெற்ற வாகனத்தில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதோடு அந்த கருவி செயல்படுவதையும், எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து டேட்டா அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.

விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் முதல்முறை குற்றம் செய்தால் ரூ.25 ஆயிரமும்,தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டால் ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்கள் செய்பவர்களுடைய உரிமமும் ரத்து செய்து வாகனமும் பறிமுதல் செய்யப்படும். வெள்ளகோவில் நகராட்சியில் அகற்றப்படும் கழிவுகளை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மட்டுமே கொட்ட வேண்டும், கழிவுநீர் அகற்றும் வாகனங்களை பதிவு செய்யாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து உரிமம் ரத்து செய்யப்படும்.விதியை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News