மடவளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக விழா நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் அருகே உள்ள மடவளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோவில்களில் வருடாந்திர ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவபெருமானுக்கு அன்னத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அன்னாபிஷேக விழா நடந்தது. விழாவில் கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தை சேர்ந்த தோடை, கண்ணந்தை, காடை, கீரை ஆகிய கோவிலின் குலத்தவர்களும், பக்தர்களும் மடவளாகம், பாப்பினி, பச்சாபாளையம், காங்கயம் உள்பட சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும், பக்தர்களும் திரளாக கலந்துகொண்டு சாமியை வழிபட்டனர்.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாக தலைவர் எஸ்.தங்கமுத்து, அன்னதான கமிட்டி நிர்வாகி பாலசுப்பிரமணி ஆகியோர் செய்திருந்தனர். இக்கோவில்களின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.