திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., மாணவர்களுக்கு பாராட்டு - பள்ளி, குறுகிய விளையாட்டுப் போட்டியில் சாம்பியன்
- குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் அனைத்திலும் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.
- உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக்குமார், பாபின் டிசூசா, ராமு ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பூர்:
திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. டிரஸ்ட் நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கடற்கரை கையுந்துபந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.
உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், இளையோர், மூத்தோர், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர். இறகு பந்து மூத்தோர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை பெற்றனர். சதுரங்கப்போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக இளையோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்றனர்.
குறுமைய அளவில் நடைபெற்ற குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப்போட்டிகள் அனைத்திலும் முதல் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டு போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தொடர்ந்து 9 வருடங்களாக ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் குறுமைய அளவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கார்த்திக்குமார், பாபின் டிசூசா, ராமு ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.