உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மின்வாரிய அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு - கலெக்டரிடம் மனு

Published On 2023-05-16 05:14 GMT   |   Update On 2023-05-16 05:14 GMT
  • கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர்.
  • தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது.

திருப்பூர் :

திருப்பூர் கலெக்டரிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையாக இருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்துவதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையான தகவல்களை தருவது தான் தகவல் அறியும் உரிமை சட்டம். ஆனால் மின்வாரிய அலுவலகங்களில் தகவல் உரிமை சட்டத்தை முறையாக கையாளாமல் சட்டத்தை அடியோடு முடக்க சில அலுவலர்கள் காரணமாக உள்ளனர். அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் மற்றும் அவினாசி கோட்ட மின்சார வாரிய பொது தகவல் அலுவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் மின்வாரிய துறை சார்ந்த கேள்விகள் கேட்கும்போது, வினோதமான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர். பல கேள்விகளுக்கு பதிலே அளிப்பதில்லை. இதனால் தகவல் அறியும் உரிமை சட்டம் ஏற்படுத்தியதன் நோக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News