உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கட்டணம் செலுத்தாததால் மின்துண்டிப்பு பற்றி வரும் போலியான குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் - மேற்பார்வை பொறியாளர் எச்சரிக்கை

Published On 2023-04-15 04:41 GMT   |   Update On 2023-04-15 04:41 GMT
  • மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திருப்பூர் :

திருப்பூர் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சா.முத்துவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் மின் கட்டணம் செலுத்தாததால் மின் துண்டிப்பு செய்யப்படும் என குறுஞ்செய்தி மூலம் தகவல் கொடுத்து அதன் மூலம் டிஜிட்டல் பணபரிமாற்றம் (மொபைல் டிரேன்ஸ்லேசன்) செய்யுமாறு கூறப்படும் போலியான தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவதை கண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வாறான போலியான தகவல்கள் தங்களது செல்போனுக்கு கிடைக்கப்பெற்றால் தங்களது 10 இலக்க மின் இணைப்பு எண் மற்றும் நிலுவையில் உள்ள மின் கட்டணம் போன்ற தகவல்கள் அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்.

மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணையதளம் www.tnebltd.gov.in வழியாக மின்கட்டணம் செலுத்தி மக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News