உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மானிய விலையில் நெல், உளுந்து விதைகள், இடுபொருட்கள் - விவசாயிகள் வாங்கி பயனடைய வேண்டுகோள்

Published On 2022-07-26 08:26 GMT   |   Update On 2022-07-26 08:26 GMT
  • விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது.

உடுமலை :

உடுமலை பகுதிகளில் அமராவதி ஆயக்கட்டு பகுதிகள் மற்றும் தென் மேற்கு பருவ மழையை தொடர்ந்து குறுவை, ஆடிப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான விதை ரகங்கள் மற்றும் இடு பொருட்கள் வேளாண் துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவையான அளவு இருப்பு உள்ளதால் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி கூறியதாவது:-

வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதை, 105 நாட்கள் வயதுடைய ரகம் (கோ51) , 110 நாட்கள் வயதுடைய ஏடிடி (ஆர்) 45 ரகங்களும், 130 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட விஜிடி (வைகை டேம்) மற்றும் பிரியாணி தயாரிப்பு ஏற்ற வாசனை நெல் விதைகளும் தேவையான அளவு இருப்பு உள்ளது.மானிய விலையில் வழங்கப்படும் இந்த நெல் ரகங்களை வாங்கி, விவசாயிகள் பயன் பெறலாம்.மேலும் 75 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட உளுந்து வம்பன், 110 நாட்கள் சாகுபடி காலத்தை கொண்ட நிலக்கடலை (வி.ஆர்.டி-8), மக்காச்சோளம் (சி.ஓ.எச்.,எம்-8), கொண்டைக்கடலை, (என்.பி.இ.,ஜி 49) போன்ற சான்று பெற்ற விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

அதோடு விதை நேர்த்தி செய்வதற்கு உயிர் உரங்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விதை நேர்த்தி செய்வதன் வாயிலாக பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.மேலும் 25 சதவீதம் வரை உரச்செலவு குறையும். எவ்வளவுதான் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து பயிர்களுக்கு கொடுத்தாலும், நுண்Èட்டஉரமிடுதல் மிகவும் அவசிய தேவையாகும்.நெல், சிறு தானியங்கள், பயறு வகை பயிர்கள், தென்னைக்கு ஏற்ற நுண்Èட்ட உரங்கள், இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு, காப்பர், போரான் உள்ளிட்ட சத்துக்களை கொண்ட நுண்Èட்ட உரங்கள் விவசாயிகளுக்கு தேவையான அளவு இருப்பு உள்ளது.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்தார்.

Tags:    

Similar News