உள்ளூர் செய்திகள்
ஜனவரி 21-ந்தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் - நல்லசாமி பேட்டி
- ஒரு மரத்தின் கள்ளை 48 நாள்கள் பருகி வந்தால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்டது.
- ஜனவரி 21 ந் தேதிமுதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.
அவிநாசி:
தமிழகம் முழுவதும் ஜனவரி 21 ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி அவிநாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு மரத்தின் கள்ளை 48 நாள்கள் பருகி வந்தால் பல நோய்களை குணப்படுத்தும் மருத்துவக் குணம் கொண்டது. ஏலம், கடைகள் என்று இருந்தால், ஒரு மரத்துக்கு கள் கிடைக்காது. ஆகவே கள்ளு கடை வேண்டாம். கள்ளுக்கான தடை நீக்க வேண்டும். இதை முன்வைத்து, அரசியல் அமைப்புச் சட்டப்படி, ஜனவரி 21 ந் தேதிமுதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்.
காவிரி நீா் பிரச்னையில், நாள்தோறும் நீா் பங்கீடு என்ற அம்சம் தீா்ப்பில் இடம் பெற்றிருந்தால் தீா்வு எளிதாக இருந்திருக்கும். மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்றாா்.