திருப்பூர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் பல்வேறு இடங்களில் ஆய்வு
- உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள்பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
- கால்வாயினை தூர்வாரி சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.
திருப்பூர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்மண்டலம் -1, வார்டு -22 , பகுதியில் அமைந்துள்ளஉழவர் சந்தை பூங்காவை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மறுசீரமைப்புசெய்து கம்பி வேலிகள் அமைத்து, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மக்கள்பயன்பாட்டிற்கு வழங்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டிருந்த கழிவு நீர் கால்வாயினைபார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக கால்வாயினை தூர்வாரி சுத்தம்செய்ய உத்தரவிட்டார்.
மேலும், உழவர் சந்தையில் உள்ள கழிவறைகள், குப்பை கொட்டும் பகுதிகள்மற்றும் பயன்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, "மக்களுடன் மேயர்" திட்டத்தின் கீழ் 29-வது வார்டு பகுதியில்உள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வில் 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.வெ.ராதாகிருஷ்ணன்உட்பட பலர் கலந்து கொண்டனர்.