சாமளாபுரத்தில் அரசு பொது தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
- நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 3000 வழங்கப்பட்டது.
- கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.
மங்கலம் :
திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் மேல்நிலைப் பள்ளியில் 10,11, மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை மறைந்த அவிநாசியப்பகவுண்டர் நினைவாக மணிவேலுச்சாமியால் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி இந்த கல்வியாண்டில் (2022-2023) பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ 10,000 ,இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.7500,மூன்றாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000, பொருளியல் ,கணக்குப்பதிவியல் வரலாறு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தலா ரூ. 3000 மும் ஆக மொத்தம் ரூ. 60 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏ.வி.ஏ.டி. பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா. செல்வகுமார் வரவேற்புரையாற்றினார், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகாபழனிச்சாமி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் ரத்தின சபாபதி , பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மோகன்குமார், ஆடிட்டர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.