உள்ளூர் செய்திகள்
உடுமலை மலை பகுதிகளில் பருவ மழை தொடங்கியது
- மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாரலுடன் கூடிய மழை நீடித்து வருகிறது.
- பருவமழை துவங்கியதால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சாரலுடன் கூடிய மழை நீடித்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான தளி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட செட்டில்மெண்ட் பகுதிகளில் மழை நீடிப்பதால், இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. பருவமழை துவங்கியதால் வனப்பகுதிகளில் மீண்டும் பசுமை திரும்பி உள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் ,குட்டைகள் , தடுப்பணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருமூர்த்தி மலையில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அமணலிங்கேஸ்வரர் கோவில் ,பஞ்சலிங்க அருவி பகுதிகளை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.