- மளிகை கடை முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்.
- திருடன், திருடன் என்று சத்தம் போட்டவாறு அவரை துரத்தியுள்ளார்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துகந்தம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது38). இவர் ' சேவூர் அருகே பந்தம்பாளையத்திலிருந்து கந்தம்பாளையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு நபர்லிப்ட் கேட்டுள்ளார். எனவே அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார். அப்போது வழியில் ஒரு மளிகை கடை முன் சந்தோஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லிப்ட் கேட்டு வந்த நபர் மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து மோட்டார் சைக்கிளை தள்ளி சென்றார்.
இதைப்பார்த்த| சந்தோஷ் திருடன், திருடன் என்று சத்தம் போட்டவாறு அவரை துரத்தியுள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் அவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளை தள்ளி சென்ற நபரை பிடித்து அவினாசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் போத்தம்பாளையத்தை சேர்ந்தவேலு சாமி மகன் சாமிநாதன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவர் ஏற்கனவே அவனாசி, சேவூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.