உள்ளூர் செய்திகள்

சீர்வரிசை பொருட்களை கோவில் நிர்வாகியிடம் இஸ்லாமியர்கள் வழங்கிய காட்சி.

உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு சீர்வரிசை தட்டுகளுடன் வந்த இஸ்லாமியர்கள்

Published On 2023-04-11 09:50 GMT   |   Update On 2023-04-11 09:50 GMT
  • தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
  • அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவிலுக்கு வந்தனர்.

உடுமலை :

மதங்களின் பெயரால் பல கலவரங்கள்,பல போராட்டங்கள் நடந்து வரும் இன்றைய சூழலில் தொப்புள் கொடி உறவுக ளாக வாழ்ந்து வரும் உடுமலை மக்கள் வியக்க வைக்கிறார்கள்.

ஆண்டுதோறும் நடைபெறும் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை அனைத்து மதத்தினரும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.குறிப்பாக தேர்த்திருவிழாவன்று தேரோடும் வீதிகளில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் நின்று தேருக்கு வரவேற்பளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.தற்போது தேர்த்திருவிழா நிகழ்வுகள் உற்சாகமாக நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் இஸ்லாமியர்கள் ஊர்வ லமாக வந்து மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்று ள்ளது.உடுமலை பூர்வீக பள்ளி ஜமாத்தை சார்ந்த இஸ்லாமியர்கள் நேற்று உடுமலை நகர்மன்றத் தலைவர் மத்தீன் தலை மையில் அம்மனுக்கு சாத்த பட்டுசேலை மற்றும் பழங்கள் கொண்ட சீர் வரிசை தட்டுடன் கோவி லுக்கு வந்தனர்.அவர்களை கோவில் பரம்பரை அற ங்காவலர் யு.எஸ்.எஸ் ,ஸ்ரீதர்உள்ளிட்ட நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.மேலும் அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.சீர்வரிசைத் தட்டுக்களை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கிய இஸ்லாமியர்கள் தேர்த்தி ருவிழா சிறக்க வாழ்த்து க்களை தெரிவித்தனர்.

மதங்களைக் கடந்து மனித நேயத்துடன் ஒருவரு க்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழச் செய்தது.பல இடங்களில் மத ரீதியான மோதல்கள் நடந்து வரும் நிலையில் மதங்களை விட மனிதமே பெரிது என உடுமலை மக்கள் உதாரண மாக வாழ்வது இந்த நிகழ்வால் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது.

Tags:    

Similar News