உள்ளூர் செய்திகள்
காங்கயம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி சாவு
- ஊா்ந்து வந்த பாம்பு சாமியாத்தாளின் வலது காலில் கடித்துள்ளது.
- அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
காங்கயம்:
காங்கயம் அருகேயுள்ள தொட்டியபட்டி பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி மனைவி சாமியாத்தாள் (வயது 70). இவா் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு ஊா்ந்து வந்த பாம்பு சாமியாத்தாளின் வலது காலில் கடித்துள்ளது.
அவரின் அலறல் சப்தம் கேட்டு வந்த குடும்பத்தாா், சாமியாத்தாளை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.