- தூத்தாரிபாளையத்தில் சத்தியநாதன் ( 30) என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
- 25 பாக்கெட்டுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் செல்வராஜ் (வயது 50) என்பவரது மளிகை கடையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 7 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதுபோல் மானாசிபாளையத்தில் உள்ள பூபாலன் (55 ) என்பவரது கடையில் இருந்து 7 பாக்கெட்களும், கிருஷ்ணாபுரத்தில் உள்ள மணிகண்டன்(26) என்பவரது மளிகை கடையில் இருந்து 10 பாக்கெட்டுகளும் என மொத்தம் 25 பாக்கெட்டுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
அது போல் பொங்கலூரை அடுத்த வெள்ள நத்தம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (52) என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்ததில் அவர் வைத்திருந்த 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதுபோல் தூத்தாரிபாளையத்தில் சத்தியநாதன் ( 30) என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கேத்தனூரில் அழகு ராஜா என்பவரிடமிருந்து 10 மது பாட்டில்களும், சந்தமநாயக்கன் பாளையம் முருகேசன்(50) என்பவரிடமிருந்து 7 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.