வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்ற பா.ம.க. கோரிக்கை
- தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியா்கள் வாழ்ந்து வருகின்றனா்.
- போராட்டத்துக்கு பின்னா் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
திருப்பூர்:
வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கு பா.ம.க., சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
திருப்பூா் மாநகா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் ெரயில் நிலையம் எதிரே உள்ள தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பபட்டது. இந்த நிகழ்வுக்கு அக்கட்சியின் மாநகா் மாவட்ட செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வன்னியா்கள் வாழ்ந்து வருகின்றனா். கடந்த 2020-21 ம் ஆண்டில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு பின்னா் வன்னியா்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.இதற்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் தடை இல்லை என்று தீா்ப்பளித்துள்ளது. ஆகவே இந்த கல்வியாண்டிலேயே 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றனா்.