உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

Published On 2022-06-26 07:54 GMT   |   Update On 2022-06-26 07:54 GMT
  • ஆங்கிலத்தை கற்பிக்க உதவும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • 636 ஆசிரியர்கள் பயன் அடைவர்.

உடுமலை:

உடுமலை திருமூர்த்தி நகர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 4 மற்றும் 5ம் வகுப்பு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில், உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் பேசியதாவது: -

ஆசிரியர்களுக்கு எளிய முறையில் ஆங்கிலத்தை கற்பிக்க உதவும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களின் ஆங்கிலம் படிக்கும் திறன் மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும்.இதேபோல, 6, 7, 8, 9 ம் வகுப்பு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும். இதன் வாயிலாக திருப்பூர் மாவட்டத்தில் தொடக்க நிலை வகுப்புகளில் பணிபுரியும் 1,508 ஆங்கில பாட ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 9-ம் வகுப்புகளில் ஆங்கில பாடம் கற்பிக்கும் 636 ஆசிரியர்கள் பயன் அடைவர்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து பயிற்சியின் சிறப்பம்சங்கள் குறித்து பணியிடை பயிற்சி துறை தலைவர் பாபிஇந்திரா விளக்கினார். முதுநிலை விரிவுரையாளர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக சுகுணா செயல்பட்டார்.

Tags:    

Similar News