சென்னைக்கு தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
- அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
- கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் புயல் சின்னம் தமிழ்நாட்டை நெருங்கியது. நாகையில் இருந்து 400 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.
வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக ஃபெங்கல் வலுப்பெறும். அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
தாழ்வு மண்டலம் 8 கி.மீ. வேகம் 10 கி.மீ. வேகம் என படிப்படியாக அதிகரித்து தற்போது 13 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் புயல் சின்னம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னைக்கு தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் உள்ளது. திரிகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே 130 கி.மீ., நாகைக்கு தென்கிழக்கே 400 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருக்கிறது.