உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகைக்கு 15 நாட்களுக்கு முன்பாக போனஸ் வழங்க வேண்டும் பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்
- கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.காசிராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் மு.மனோகரன் முன்னிலை வகித்தாா்.
- போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.காசிராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் மு.மனோகரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பனியன் தொழிலைச் சாா்ந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும். மேலும், தொழிலாளா்களுக்கான 4 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.