வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பை துண்டிக்க முடிவு
- தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.
- பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் வரி வசூல் நிலவரம் குறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் வருவாய் பிரிவினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.இதில் பகுதிவாரியாக வரி வசூல் நிலவரம் குறித்து விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், புது வரி விதிப்புக்குப் பின் பெறப்பட்ட வசூல் நிலவரம்,சொத்து வரி விதிப்புகளில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டடங்கள் ஆகியன குறித்து விவரம் பெறப்பட்டது.
தொழில்வரி விதிப்புகள் அதிகரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வரியினங்கள் முனைப்புடன் வசூலிக்க வேண்டும்.குடிநீர் கட்டணம் நீண்ட நாள் உள்ள இணைப்புகளில் வசூல் தாமதமாகும் நிலையில் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது ஏறத்தாழ 4 கோடி ரூபாய் குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளது. வரும் வாரத்தில் இதில் தீவிரம் காட்டி குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாயாவது வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.