முத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம் - நாளை நடக்கிறது
- காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது.
- சொட்டு மருந்து, உணவு, போக்குவரத்து, தங்குமிடம், கருப்பு கண்ணாடி ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், முத்தூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. முகாமில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட அரசு கண் மருத்துவர் குழுவினர் மூலம் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
மேலும் முகாமில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக நாளையே அழைத்து செல்லப்பட்டு அங்கு உள்வி லென்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சொட்டு மருந்து, உணவு, போக்குவரத்து, தங்குமிடம், கருப்பு கண்ணாடி ஆகியவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எனவே முகாமில் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி மற்றும் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.