பல்லடத்தில் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
- குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பல்லடம் சினேகா சமூகசேவை மைய வளாகத்தில் நடைபெற்றது.
- வளர் இளம் பருவத்தினர்,சமூகசேவை மைய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பல்லடம் சினேகா சமூகசேவை மைய வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர் ராஜசேகரன், பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு வழக்கறிஞர்கள் கோபாலகிருஷ்ணன், தனபாக்கியம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழந்தைகளு க்கான சட்டங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும், அதிலுள்ள நன்மை, தீமைகள் பற்றியும், செல்போனை பயன்படுத்து வதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றியும், குழந்தைகள் பாதுகாப்பு கோரி தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்தும், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது பற்றியும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் கதை வடிவில் விளக்கி கூறினார்கள். இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர்,சமூகசேவை மைய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.