திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப்பணியாளா்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
- கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
- தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவிநாசி:
திருமுருகன்பூண்டி நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டது.
தூய்மைப் பணியாளா்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுப்புப் பணியில் கழிவுநீா் மற்றும் மழைநீா் வடிகால், வீடு மற்றும் பொது சமூக கழிப்பறை, கழிவு சேகரிப்பு, கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களின் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டது.
இதில் தூய்மைப் பணியாளா்களின் குடும்ப விவரங்கள் குறித்து சேகரித்து, அரசு நலத் திட்டங்களுக்கு உள்படுத்தபடவுள்ளது.
இது குறித்து திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பயிற்சிக் கூட்டத்துக்கு, நகராட்சி நிா்வாக மண்டல இயக்குநா் அலுவலக உதவித் திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் ஆண்டவன் தலைமை வகித்தாா். தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளா் நிஷாந்தினி, துப்புரவு அலுவலா் செந்தில்குமாா், ஆய்வாளா் செல்வம், மகளிா் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.