உள்ளூர் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்ற காட்சி. 

காங்கயம் துளிகள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

Published On 2023-10-30 08:51 GMT   |   Update On 2023-10-30 08:53 GMT
  • சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர்.
  • வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

காங்கயம்:

காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவது, குளம் குட்டைகளை தூர்வார்வது போன்ற பணிகள் செய்யப்பட்டு வருகின்றது.சிவன்மலை ஊராட்சியுடன் இணைந்து கருங்கல் வனம் எனும் பூங்கா அமைத்து அதில் அரியவகை மரங்கள் மற்றும் அழிந்து வரும் மரக்கன்றுகளையும் நட்டுள்ளனர். மேலும் இதுவரை 800 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 131-வது கட்டமாக வெள்ளகோவிலை அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி பெரிய கோவில் அடஞ்சாரம்மன் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவில் வெள்ளகோவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஸ், சிவாஸ் பேப்பர் மில் சி.சண்முகராஜ், சபரி கன்ஸ்ட்ரக்சன் வி.தங்கமுத்து, அம்மன் கன்ஸ்ட்ரக்சன் சக்திவேல் முருகன், வீரசோழபுரம் ஜி. பாலசுப்பிரமணியம் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள், காங்கயம் துளிகள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News