உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பெருமாநல்லூரில் மழைமானி வைத்து மழை அளவு கணக்கீடு

Published On 2022-11-02 06:35 GMT   |   Update On 2022-11-02 06:35 GMT
  • அவிநாசியை மையப்படுத்தி மட்டுமே தாசில்தார் குடியிருப்பு பகுதியில் மழைமானி வைக்கப்பட்டு மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது.
  • சேவூரை மையப்படுத்தி மழைமானி வைத்து, மழைப்பொழிவை அளவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அவினாசி:

அவிநாசி மற்றும் சேவூர் பகுதி சார்ந்த மழைப்பதிவில் வித்தியாசம் தென்படுகிறது. ஆனால் அவிநாசியை மையப்படுத்தி மட்டுமே தாசில்தார் குடியிருப்பு பகுதியில் மழைமானி வைக்கப்பட்டு மழைப்பொழிவு கணக்கிடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.

இத்தகைய முரண்பாடுகளை களைய, அவிநாசி மற்றும் சேவூரை மையப்படுத்தி மழைமானி வைத்து, மழைப்பொழிவை அளவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையறிந்த வருவாய்த் துறையினர் சேவூர், கருவலூர், துலுக்கமுத்தூர், பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் மழைமானி வைத்து மழையளவை துல்லியமாக கணக்கிட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல், மழையளவில் வித்தியாசம் உள்ள மாவட்டத்தின் பிற இடங்களிலும் மழைமானி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News