சைமா சங்க தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
- வேட்பு மனு சைமா அலுவலகத்தில் பெறப்பட்டன.
- வேட்பு மனு சைமா அலுவலகத்தில் பெறப்பட்டன.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் துறையில் தாய் சங்கமாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) விளங்கி வருகிறது. இந்த சங்கத்தில் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 19-ந் தேதி முதல் சைமா அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டன.
தலைவர் பதவியை தவிர மற்ற பதவிகளுக்கு புதியவர்கள் போட்டியிடுவதாக தகவல் பரவியது. வேட்பு மனு சைமா அலுவலகத்தில் பெறப்பட்டன. தலைவர் பதவிக்கு ஏற்கனவே தலைவராக உள்ள வைகிங் ஈஸ்வரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். மற்ற பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தனர். தலைவர் பதவிக்கு வைகிங் ஈஸ்வரன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 1 துணைத்தலைவர் பதவிக்கு 2 பேரும், 2 இணைச்செயலாளர்கள் பதவிக்கு 3 பேரும், 1 பொருளாளர் பதவிக்கு 3 பேரும், 1 பொதுச்செயலாளர் பதவிக்கு 2 பேரும், 21 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 45 பேரும் என மொத்தம் 56 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்று வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. 25-ந் தேதி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம். வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் 26-ந் தேதி வெளியிடப்படும். 29-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சைமா அலுவலகத்தில் தேர்தல் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.