உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்

Published On 2023-01-01 03:43 GMT   |   Update On 2023-01-01 03:43 GMT
நடைப்பயணமாக சுமாா் 3 லட்சம் பக்தா்கள் காங்கயம் வழியாக பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.

காங்கயம்:

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச விழாவில் பங்கேற்பதற்காக சேலம், எடப்பாடி, நாமக்கல், ஈரோடு, திருச்செங்கோடு, பவானி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் இருந்து நடைப்பயணமாக சுமாா் 3 லட்சம் பக்தா்கள் காங்கயம் வழியாக பாதயாத்திரையாக செல்வது வழக்கம்.நடைப்பயணமாக செல்லும் பக்தா்களுக்கு விபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் காங்கயம் போக்குவரத்து போலீசார் சாா்பில் பக்தா்களுக்கு இரவில் ஒளிரும் வில்லைகள் வழங்கப்பட்டன.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், சட்டையின் பின் பகுதியில் இந்த வில்லைகளை ஒட்டிக்கொண்டு இரவு நேரத்தில் பக்தா்கள் நடைப்பயணம் செல்லும்போது வாகனங்களின் விளக்கு வெளிச்சம் இதன் மீது பட்டவுடன் அது ஒளிரும். இதனால் பக்தா்கள் நடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்குத் தெரியும்.

இதன் மூலம் விபத்து ஏற்படாமல் பக்தா்களின் நடைப்பயணம் பாதுகாப்பானதாகும் அமையும். மேலும் பக்தா்கள் இரவு நேர நடைப்பயணத்தின்போது சாலையின் நடுவே செல்லாமல், சாலையோரமாகச் செல்ல வேண்டும் என பக்தா்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் என்றனா். 

Tags:    

Similar News