உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசின் சார்பில் திருப்பூரில் நீர் - மோர் பந்தல் அமைக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Published On 2023-03-18 07:11 GMT   |   Update On 2023-03-18 07:11 GMT
  • கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.
  • பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க மக்கள், இளநீர், மோர் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கி அருந்துகிறார்கள். திருப்பூர் நகரத்தை பொறுத்தவரை வருடத்தில் சில நாட்கள் மழை பெய்கிறது. மற்ற நகரத்தை போல் அல்லாமல் இங்கு வெயில் அதிகம். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

திருப்பூரில் அமைந்துள்ள சாயப்பட்டறைகள், பனியன் கம்பெனிகளில் உள்ளூர், வெளிமாவட்ட, மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். திருப்பூர் சுற்றுவட்டார நகரங்களான உடுமலை, பல்லடம், அவினாசி, தாராபுரம், உள்ளிட்ட நகரங்களுக்கு தினந்தோறும் பஸ்சிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தங்களது பணி நிமித்தமாக அதிகளவில் சென்று வருகிறார்கள். அவர்கள் மதிய நேரங்களில் வெயில் தாக்கத்தால் அவதி அடைகின்றார்கள். சிலருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டு உடல் நலக்குறைவும் ஏற்படுகிறது. தண்ணீர் தேடி தனியார் ஓட்டல்கள் மற்றும் குளிர்பான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. அடைத்து விற்கப்படும் பாட்டில் நீரின் விலை நிர்ணயித்ததை விட கூடுதலாக விற்கிறார்கள். தரம் அப்படி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதனால் மதிய நேரங்களில் கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வருவோர், வேலை காரணமாக அலையும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாகத்தால் அவதி அடைகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தனியார் அமைப்பைச் சேர்ந்த சிலர் நீர் மோர் பந்தலை அமைத்து மக்களின் தாகத்தை தீர்க்க வழி செய்கிறார்கள் என்பது சற்று ஆறுதலான விஷயம். நீர் மோர் அருந்துவதால் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், கால்சியம், ரிபோப்ளேவின் பாஸ்பரஸ், புரோட்டீன், என்சைம்கள் கிடைக்கின்றன. மேலும் பொட்டாசியம் அதிகம் உள்ள கொழுப்பு சத்து மற்றும் கலோரி இதில் மிக மிக குறைவு. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் விட்டமின் குறைபாடு ஏற்படுவதை தடுக்கலாம். அதே போன்று உடல் வறட்சி போன்றவற்றால் நீரிழப்பு ஏற்படுகிறது .அதிலும் கோடையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை ஈடு செய்யும் அருமையான மருந்து இந்த நீர்மோர். இது சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே தினமும் மோர் குடிப்பது நல்லது . எலும்புகளின் வலிமைக்கு பற்களின் ஆரோக்கியத்துக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம்.

இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மக்கள் கூடும் முக்கிய இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், முக்கிய மார்கெட் பகுதிகள், பூங்காக்கள், கோவில்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும் வகையில் தற்காலிக நீர் மோர் பந்தல்களை அமைக்கலாம். இதற்கு என்று பெரிதாக செலவுகள் ஓன்றும் ஆகாது. பொதுமக்களும் வெப்பத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள நீர் மற்றும் மோரை வாங்கி பருகி செல்வார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News