உள்ளூர் செய்திகள்
கருவலூர் மாரியம்மன் கோவிலில் நாளை பாலாபிஷேகம்
- 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார்.
- மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். பின்னர் மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். சிறிது தூரம் தேர் இழுத்து நிறுத்தப்பட்டது.
மீண்டும் கடந்த 6,7-ந் தேதிகளில் தேர் இழுக்–கப்–பட்டு நிலையை வந்தடைந்தது. இதையடுத்து தெப்பத்தேர், காமதேனு வாகனம், குதிரைவாகன உற்சவம் ஆகியவை நடந்தது. நேற்று முன்தினம் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று மறுபூஜையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.