உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்பு நாளை நடக்கிறது
- காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற உள்ளது.
- விவசாயிகள் நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரில் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ளது.
இங்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் உள் வளாக பயிற்சி நடைபெற உள்ளது. விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2248524 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.