பல்லடம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
- அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை , யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
பல்லடம் :
சிவன் கோவில்களில் பிரதோஷ தினத்தில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். சி வபெருமானை தினமும் வணங்கினாலும் பிரதோஷ நாளில் கோவிலுக்கு சென்று வணங்குவது சிறந்த பலன் அளிக்கும் என முன்னோர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம், பூஜை , யாகம், ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதேபோல பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் நவகிரக கோட்டையில் பிரதோஷத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.காமாட்சிபுரம் ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தார். இதேபோல பல்லடம் பொங்காளியம்மன் கோவில், சந்தைப்பேட்டை விநாயகர் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.